ஃபெஞ்சல் பெருந்துயர் மக்களோடு சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் கடுமையாக பாதிக்குள்ளான ஊத்தங்கரை, பர்கூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளை அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா நேரில் பார்வையிட்டு வருகிறார். மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த புரட்சித்தாய் சின்னம்மா, நிவாரண உதவிகளை வழங்கி அவர்களின் குறைகளையும் கேட்டறிந்து ஆறுதல் தெரிவித்து வருகிறார்.

அண்மையில் தமிழகத்தை தாக்கிய ஃபெஞ்சல் புயலால் பெய்த கனமழை காரணமாக விழுப்புரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனையடுத்து, விழுப்புரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கடந்த 2 மற்றும் 3ஆம் தேதிகளில் பார்வையிட்ட அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, அப்பகுதி மக்களுக்கு அரிசி, வேட்டி, போர்வை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்.

அதனை தொடர்ந்து, ஃபெஞ்சல் புயலால் பெய்த கன மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புரட்சித்தாய் சின்னம்மா பயணம் மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல் கூறி வருகிறார்.

அந்த வகையில், ஊத்தங்கரை ஏரிக்கரை பகுதிக்கு சென்ற புரட்சித்தாய் சின்னம்மா, கனமழையால் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்ட பகுதியை பார்வையிட்டார். அப்போது அங்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து புரட்சித்தாய் சின்னம்மாவிடம் வாகன உரிமையாளர்கள் விளக்கினர். பெரும் பாதிப்புக்குள்ளான தங்களை, ஆட்சியில் இருப்பவர்கள் யாரும் இதுவரை சந்தித்து ஆறுதல் கூறவில்லை என்றும், தங்களுடைய குறைகளே கேட்கவில்லை என்றும், எந்த உதவியும் செய்யவில்லை என்றும் அவர்கள் புரட்சித்தாய் சின்னமாவிடம் முறையிட்டனர். வாழ்வாதரத்தை இழந்து தவிப்பதாக கூறிய வாகன உரிமையாளர்களின் குறைகளை புரட்சித்தாய் சின்னம்மா கனிவுடன் கேட்டறிந்தார். 


Night
Day