அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 53ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் திருவுருவப் படத்திற்கு, கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை, கடந்த 1972ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ம் தேதி, பொன்மனச் செம்மல், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தொடங்கினார். அவரைத் தொடர்ந்து, கழகப் பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற, புரட்சித்தலைவி அம்மா, தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் பேராதரவோடு அஇஅதிமுகவை மிகச் சிறப்பாக வழிநடத்தினார். மாண்புமிகு அம்மாவின் மறைவுக்குப் பின்னர், கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா பல்வேறு சோதனைகளை வெற்றிகரமாகக் கடந்து, கழகத்தை, கண்ணை இமை காப்பது போல் காப்பாற்றி வருகிறார். இந்நிலையில், கழகம் 52 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்து, இன்று, 53வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனை முன்னிட்டு, சென்னை போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில், அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் திருவுருவப் படத்திற்கு, கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.