அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் காளை "சிறந்த காளை"யாக தேர்வு

எழுத்தின் அளவு: அ+ அ-

 மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் களம் கண்ட அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் காளை, யாரையும் நெருங்க விடாமல் கம்பீரமாக நின்று விளையாடி தங்கக் காசு உள்ளிட்ட பரிசுகளை வென்று அசத்தியது. சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்ட புரட்சித்தாய் சின்னம்மாவின் காளைக்கு டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது.


உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தை பொங்கல் அன்று வழக்கமான உற்சாகத்துடன் கோலாகலமாக நடைபெற்றது. முதல் சுற்று தொடங்கி வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன. அதில் 9வது சுற்றில் வாடிவாசலில் இருந்து அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் காளை அவிழ்த்துவிடப்பட்டது. பொதுமக்களின் ஆரவாரத்துக்கு மத்தியில் வாடிவாசலில் இருந்து சீறிப்பாந்த காளை, மாடுபிடி வீரர்களை பந்தாடியது.

நீண்ட நேரம் களத்தில் நின்றிருந்த சின்னம்மாவின் காளையை, தொடக்கூட முடியாமல் வீரர்கள் அந்தரத்தில் தொங்கியவாறு பயத்தில் நடுங்கி கொண்டிருந்தனர். வீரா்களை பந்தாட காத்திருந்த சின்னம்மாவின் காளையை இறுதி வரை யாராலும் அடக்க முடியாததால் காளை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு தங்கக்காசு, மிதிவண்டி உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.

காளை ஆக்ரோஷத்துடன் களத்தில் நின்றதால், காவல்துறையினர் பாதுகாப்பு வாகனத்தில் வந்து காளையை அழைத்து சென்றனர். ஜல்லிக்கட்டு போட்டியின் முடிவில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டது. புரட்சித்தாய் சின்னம்மாவின் காளைக்கு டிராக்டர் மற்றும் பசுங்கன்றுடன் கூடிய பசுமாடு பரிசாக வழங்கப்பட்டது.

புரட்சித்தாய் சின்னம்மாவின் காளையை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு அழைத்து வந்த புதுக்கோட்டையை சேர்ந்த மலையாண்டி என்பவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் காளை சிறப்பாக விளையாடி முதல் பரிசு பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். 

Night
Day