அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுடன் கழக நிர்வாகி பி.ஆர்.எஸ். சக்திவேல் குடும்பத்துடன் சந்திப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை, கழக நிர்வாகி பி.ஆர்.எஸ். சக்திவேல் குடும்பத்தினருடன் சந்தித்து, தனது இல்லத் திருமணத்திற்கான அழைப்பிதழை வழங்கி, ஆசி பெற்றார்.

செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த கழக நிர்வாகியும் வழக்கறிஞருமான பி.ஆர்.எஸ். சக்திவேலின் சகோதரி சற்குணம் - பிரபு ஆகியோரின் திருமணம் அடுத்த மாதம் 4ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறுகிறது. இதற்காக சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெ ஜெயலலிதா இல்லத்தில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை, கழக நிர்வாகி சக்திவேல் தனது குடும்பத்தினருடன் சந்தித்து, சகோதரியின் திருமண விழாவுக்கான அழைப்பிதழை வழங்கி, அழைப்பு விடுத்து ஆசி பெற்றார். பின்னர் புரட்சித்தாய் சின்னம்மாவுடன் கழக நிர்வாகி மற்றும் அவரது குடும்பத்தினர் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். 

Night
Day