அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு எதிரொலி - எஸ்பி அலுவலகம் திறப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் குற்றச்சாட்டு எதிரொலியாக நெல்லை மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தற்போது திறக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், அங்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் ஆட்சியர் அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் அம்மா வழியில் மக்கள் பயணம் மேற்கொண்ட புரட்சித்தாய் சின்னம்மா, காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் ஆட்சியர் அலுவலகத்தை உடனடியாக திறக்கவேண்டும் என வலியுறுத்தினார். இதன் எதிரொலியாக, தற்போது அங்கு கட்டி முடிக்கப்பட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அவசரகதியில் தூய்மைப்படுத்தப்பட்டு அதனை தமிழக அரசு திறந்து வைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Night
Day