புரட்சித்தாய் சின்னம்மாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராஜனின் 7-ம் ஆண்டு நினைவு நாள் - அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித் தாய் சின்னம்மா அவர்களின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராஜன் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மரியாதை செலுத்தினர்.

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித் தாய் சின்னம்மா அவர்களின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராஜன் அவர்களின் நினைவு தினம், தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் எதிரே உள்ள அவரது நினைவிடத்தில் இன்று அனுசரிக்கப்பட்டது. 

இதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமுதாய தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். நினைவிடம் வரும் அனைவருக்கும் ம.நடராஜன் பேரவை சார்பில் உணவு வழங்கப்பட்டது. மேலும் தண்ணீர் பந்தல் அமைத்து தர்பூசணி, மோர் மற்றும் குளிர்பானம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. 

Night
Day