அஇஅதிமுக-வை ஒன்றிணைக்கும் தமது முயற்சி வெற்றி அடையும் : புரட்சித்தாய் சின்னம்மா உறுதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அ.இ.அ.தி.மு.க.வை ஒன்றிணைக்கும் முயற்சியில் தான் நிச்சயம் வெற்றி பெறுவேன் என அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித் தாய் சின்னம்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார். கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு புரட்சித்தலைவி அம்மா, தெய்வமாக இருந்து நிச்சயம் தண்டனை பெற்றுத் தருவார் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். 


முன்னதாக, கோடநாட்டிற்கு வருகை தந்த அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித் தாய் சின்னம்மாவுக்கு, பட்டாசு வெடித்தும், பூரண கும்ப மரியாதை அளித்தும் கோடநாடு எஸ்டேட் தொழிலாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், கிரீன் டீ எஸ்டேட் மேலாளர் பழனிகுமார், கோத்தகிரி முன்னாள் பேருராட்சி தலைவர் வாப்பு, கோத்தகிரி ஒன்றிய முன்னாள் தலைவர் மணி, முன்னாள் கொடநாடு ஊராட்சி தலைவர் தேவராஜ் ஆகியோர், புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு மலர்கொத்து வழங்கி வரவேற்றனர். 

Night
Day