அஇஅதிமுக 53வது ஆண்டு தொடக்க விழா - சின்னம்மா ஆணைக்கிணங்க, ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக 53வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா ஆணைக்கிணங்க, தென்காசி மாவட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மக்களின் தேவையறிந்து உதவிகளை உரிய நேரத்தில் வழங்கிய புரட்சித்தாய் சின்னமாவிற்கு மக்கள் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர். 

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தை சமீபத்தில் மேற்கொண்டார். அப்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விஜயம் செய்த அவர், மக்களின் குறைகளை அக்கறையோடும், அன்போடும் கேட்டறிந்து, அவற்றை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஆளும் கட்சியினர், அதிகாரிகள் என யாரும் தங்கள் பகுதிக்கு வராத நிலையில், புரட்சித்தாய் சின்னம்மா தங்களை தேடி வந்து குறைகளை கேட்டறிந்தது மக்களிடையே மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்தநிலையில், தென்காசி மாவட்டம் நெல்கட்டும்செவல் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டி வீரனின் வாரிசுதாரர்களாகிய 10 பெண்களுக்கு, புரட்சித்தாய் சின்னம்மா சார்பில் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. தென்காசி மாவட்டக் கழக நிர்வாகிகள் பூசைத்துரை, உதயா, பொன்னுத்தாய் ஆகியோர் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், ஒண்டிவீரன் ஆறுமுகம், நாட்டாமை சிவஞானம், ஜெகன், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மதன், தையல் ஆசிரியை கீதாராணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தையல் இயந்திரங்களை பெற்றுக் கொண்ட பெண்கள், புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொண்டனர்.  

இதனைத் தொடர்ந்து நெல்கட்டும்செவல் பச்சேரி வெண்ணி காலாடி வாரிசுதாரர்களாகிய 15 பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. தென்காசி மாவட்டக் கழக நிர்வாகிகள் பூசைத்துரை, உதயா, பொன்னுத்தாய் ஆகியோர் தையல் இயந்திரங்களை வழங்கினர். தையல் இயந்திரங்களை பெற்றுக் கொண்ட பெண்கள், புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

அதேபோல் சுந்தரபாண்டியபுரம் திருமலை குமாருக்கு சென்ட்ரிங் எந்திரம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ராதாகிருஷ்ணன், ஜெகன், காளிராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, அம்மாவின் வழியில் மக்கள் பயணம் மேற்கொண்டபோது களப்பாக்குளம் பகுதியைச் சேர்ந்த சின்னம்மா சுய உதவிக் குழு பெண்கள், விவசாயம் மேற்கொள்வதற்காக விவசாய இயந்திரங்கள் வழங்குமாறு புரட்சித்தாய் சின்னம்மாவிடம் அன்பு வேண்டுகோள் விடுத்தனர். அதன்படி, அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா ஆணைக்கிணங்க கதிர் அறுப்பு இயந்திரம், உழவு இயந்திரம், பூச்சி மருந்து அடிக்கும் இயந்திரம், விதை அறுக்கும் இயந்திரம் உள்ளிட்ட இயந்திரங்கள் வழங்கப்பட்டன. தென்காசி மாவட்டக் கழக நிர்வாகிகள் பூசத்துரை, உதயா, பொன்னுத்தாய் ஆகியோர் அவற்றை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

மக்களுக்கு தேவையான உதவிகளை விளம்பர திமுக அரசு செய்யாத நிலையில், மக்களின் நலனில் முழுஅக்கறை கொண்ட, மக்களுக்காகவே வாழும் புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள், மக்களின் தேவையறிந்து அவர்களுக்கு உரிய நேரத்தில் உதவிகளை செய்தது கழகத்தினர் மட்டுமின்றி பொதுமக்களையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. 

Night
Day