அச்சுறுத்தும் HMPV - மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்

எழுத்தின் அளவு: அ+ அ-

நாட்டில் சுவாச நோய்களின் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை வலுப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் புன்னியா சலிலா ஸ்ரீவத்சவா தலைமையில் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் செயலளர்களின் கூட்டம் நடைபெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

கூட்டத்தில் HMPV வைரஸ் தொற்றின் பாதிப்பு குறித்தும், எடுக்கப்பட்டுள்ள முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. 

இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறையின் உயரதிகாரிகளும், மருத்துவ நிபுணர்களும் கலந்து கொண்டு முன்னேச்சரிக்கைக்கான நடவடிக்கைகள் குறித்து செயலாளருக்கு விளக்கமளித்தனர்.

HMPV வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் சீரான உடல்நலத்துடன் இருப்பதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இது புதிய வகை வைரஸ் இல்லை என்றும், 2001ம் ஆண்டே இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாகவும் கூட்டத்தில் செயலாளர் தகவலளித்தார்.

குளிர்காலத்தில் சுவாசம் தொடர்பான பிரச்னைகள் வருவது இயல்பு என்று கூறிய அவர், மாநில அரசுகள் இதுதொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. 

அனைத்து வயதினருக்கும் இந்த வைரஸ் காய்ச்சல் ஏற்படலாம் என்றும், சூழ்நிலைக்கு ஏற்ப தானாகவே உடல்நிலை சீராகி விடும் என்றும் செயலாளர் புன்னியா தெரிவித்துள்ளார்.

மேலும் மாநிலத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப பரிசோதனை நிலைகளை தயார் நிலையில் வைத்திருக்கவும் மாநில அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள சுகாதாரத்துறை, உடல்நிலை பாதிக்கப்பட்டால் உடனடியாக மருத்துவமனையை அணுகவும் அறிவுறுத்தியுள்ளது.

Night
Day