அடுத்த சில மணி நேரங்களில் ஃபெங்கல் புயல் உருவாகும் - வானிலை ஆய்வு மையம்

எழுத்தின் அளவு: அ+ அ-

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த சில நேரங்களில் மீண்டும் புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தொடர்ந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து இலங்கை மற்றும் டெல்டா கடலோரப் பகுதிகளையொட்டி நிலை கொண்டு இருந்தது. இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெங்கல் புயலாக மாறக்கூடும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சனிக்கிழமை கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், திடீர் திருப்பதாக இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த சில மணி நேரங்களில் மீண்டும் புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது வடமேற்கில் நகர்ந்து நாளை பிற்பகல் காரைக்கால்-மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்கும் என்றும் இதன் காரணமாக வட கடலோர மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார். புயல் கரையை கடக்கும் போது, மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும், அவ்வப்போது 90 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

Night
Day