அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் எஃப்.ஐ.ஆர் வெளியானது சட்டவிரோதம் - புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு

எழுத்தின் அளவு: அ+ அ-


சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் தமிழக அரசும், காவல்துறையும் வெளியிடும் தகவல்களில் நிறைய முரண்பாடுகள் உள்ளதாக அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், தொடர்புடைய குற்றவாளிகள் அனைவருக்கும் உரிய தண்டனை அளிக்கப்படவேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார்.

தேமுதிக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டிருந்தவர் விஜயகாந்த் என்று தெரிவித்தார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் தமிழக அரசும், காவல்துறையும் வெளியிடும் தகவல்களில் நிறைய முரண்பாடுகள் இருப்பதாக புரட்சித்தாய் சின்னம்மா குற்றம் சாட்டினார். 


Night
Day