அண்ணாமலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கிற்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதத்தினருக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் நோக்கில் பொய்யான தகவலைப் பரப்புவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கிற்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதங்களுக்கிடையே மோதலை ஏற்படுத்தும் நோக்கில் தவறான தகவலைப் பரப்புவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக, சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை எதிர்த்து அண்ணாமலை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து அண்ணாமலை உச்சநீதிமன்றத்தை நாடினார். அப்போது அவருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பிரதிவாதி தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கில் விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Night
Day