எழுத்தின் அளவு: அ+ அ- அ
உலக பிரசித்திபெற்ற திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோயிலில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா சுவாமி தரிசனம் செய்தார்.
திருவண்ணாமலையில் அமைந்துள்ள பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்கக்கூடிய அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வருகை புரிந்தார். அவருக்கு, கோயிலின் மூத்த சிவாச்சாரியார் பி.டி. ரமேஷ் சால்வை கொடுத்து வரவேற்றார்.
இதனைத் தொடர்ந்து கோயிலின் வடக்கு திசையில் அமைந்துள்ள அம்மணி அம்மன் கோபுரம் நுழைவு வாயில் வழியாக வருகை புரிந்த புரட்சித்தாய் சின்னம்மா, அங்குள்ள நந்தி பகவானை வணங்கி வழிபட்டார்.
அதனை தொடர்ந்து சம்பந்த விநாயகருக்கு, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடத்தி மலர் மாலை அணிவித்து மகா தீபாராதனை காண்பித்தனர்.
சம்பந்த விநாயகரை வழிபட்ட புரட்சித்தாய் சின்னம்மா, திருக்கோவிலில் உள்ள நவ கோபுரங்களையும் தரிசனம் செய்தார். பின்னர் அண்ணாமலையாரையும், உண்ணாமலை அம்மனையும் வழிபட்டார். கோயிலில் இருந்து வெளியே வந்த புரட்சித்தாய் சின்னம்மா
கிரிவல பாதையில் உள்ள அஷ்ட லிங்கங்களில் ஒன்றான குபேர லிங்கம் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
குபேர லிங்க கோயிலில் திரண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.