அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பொறியியல் கல்லூரியின் மின்னஞ்சலுக்கு மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இது குறித்து கோட்டூர்புரம் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அதன் பேரில் மோப்ப நாய், வெடிகுண்டு செயல் இழக்க செய்யும் நிபுணர்கள் உதவியுடன் போலீசார் வளாகம் முழுவதும் சோதனை நடத்தினர். அதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து போலீசார் மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமீப காலமாக கல்வி நிலையங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்டவற்றிற்கு வெடுகுண்டு மிரட்டல் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பது குறிப்பிடத்தக்கது. பொறியியல் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

Night
Day