அண்ணா பல்கலைக்கழகம் துணைவேந்தரே இல்லாமல் செயல்படுகிறது - புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை, அண்ணா பல்கலைக்கழக மாணவி, பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டது தொடர்பான விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் உடனடியாக செயல்பட்டு, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் உட்பட, துணைவேந்தர் நியமிக்கப்படாத பல்கலைக்கழகங்களுக்கு உடனடியாக துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தினார். குற்றச் செயல்களில் திமுகவினருக்கு தொடர்பு இருப்பதாகவும், அதனால்தான் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் மக்களிடையே கருத்து நிலவுவதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்தார். 

Night
Day