அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு விசாரணையில் சந்தேகம் - அண்ணாமலை

எழுத்தின் அளவு: அ+ அ-

அண்ணா பல்கலைக் கழக பாலியல் வழக்கு விசாரணை செல்லும் விதம், பல சந்தேகங்களை எழுப்புவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், உயர்கல்வி அமைச்சர், போலீசில் புகாரளித்த பிறகே, பல்கலைக்குத் தகவல் தெரிவித்ததாக கூறுகிறார் - ஆனால், சென்னை காவல்துறை ஆணையர், பல்கலை குழு மூலமாகவே போலீசுக்கு புகார் வந்ததாக தெரிவித்துள்ளார். ஏன் இத்தனை முரண்பாடுகள்? உண்மையில் யாரைக் காப்பாற்ற திமுக அரசு முயற்சிக்கிறது? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். 

அதுமட்டுமின்றி, இக்குற்றத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கும்வரை இதை விடப்போவதில்லை என்றும், பிரச்னையை மடைமாற்றி, உண்மையை மறைக்கும் நோக்கமிருந்தால், திமுக அரசுக்கும் இதில் தொடர்பு இருப்பதாகத்தான் கருத முடியுமென அண்ணாமலை தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Night
Day