எழுத்தின் அளவு: அ+ அ- அ
தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக காவல்நிலையம், மருத்துவமனை மற்றும் குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் அவதியடைந்தனர்.
தூத்துக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதலே கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், தென் பாகம் காவல் நிலையத்தை மழைநீர் சூழ்ந்து குளம் போல் காட்சியளித்தது. இதனைத்தொடர்ந்து, அங்கிருந்த காவலர்கள், கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தினர்.
அதேபோல், மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் மழை நீர் குளம் போல் சூழ்ந்ததால் சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் மற்றும் செவிலியர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். மழை நீரை உடனடியாக அகற்ற நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.