அதிக வாகனங்கள் பயன்படுத்தும் நகரங்களில் சென்னைக்கு 3வது இடம் 12-02-2024

எழுத்தின் அளவு: அ+ அ-

நாட்டிலேயே வாகனங்கள் அதிகம் பயன்படுத்தும் நகரங்களில் சென்னை 3வது இடம் பிடித்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. பெருகிவரும் வாகனங்களின் எண்ணிக்கையால் சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் அதனால் மக்கள் படும் அவதிகள் குறித்து தற்போது விரிவாக பாரக்கலாம்.... 

நாட்டில் அதிக வாகனங்கள் இயங்கும் நகரங்களில் பட்டியலில் அதிகபட்சமாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒரு கோடியே 12 லட்சம் வாகனங்களும், தலைநகர் டெல்லியில் 79 லட்சம் வாகனங்களும் இயங்குகின்றன. இதனையடுத்து, 76 லட்சம் வாகனங்களுடன் சென்னை மூன்றாவது இடத்தில் உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன...

சென்னையில் தாம்பரம், சோழிங்கநல்லூர், பூவிருந்தவல்லி, அம்பத்தூர், கொளத்தூர், மீனம்பாக்கம், செங்குன்றம், தண்டையார்பேட்டை, அயனாவரம், விருகம்பாக்கம், மந்தவெளி, கேகே நகர், திருவான்மியூர் ஆகிய இடங்களில் வாகனங்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்திருப்பது புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

சென்னை மாநகரில் மட்டும் 61 லட்சத்து 57 ஆயிரத்து 68 இருசக்கர வாகனங்கள் உள்ளதாகவும், 10 லட்சத்து 81 ஆயிரத்து 273 கார்கள் உள்ளதாகவும் புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.

மேலும், ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 563 ஆட்டோக்களும், 5 ஆயிரத்து 777 பேருந்துகளும் சென்னை மாநகரில் வலம் வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

வாடகை கார்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 912 ஆகவும், இதர வாகனங்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 38 ஆயிரத்து 681 ஆக இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இவ்வாறு சென்னை மாநகரத்தில் மட்டும் மொத்தமாக 76 லட்சத்து 24 ஆயிரத்து 872 வாகனங்கள் உள்ளது தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது...

சென்னையில், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சாலைகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது அவசியம் என்கின்றனர் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள்...

மேலும், சென்னை மாநகரில் இயக்கப்படும் அரசு பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டத்தால், பலர் வாகனங்களை பயன்படுத்த தொடங்கிவிட்டதாகவும் பொது மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகும், உரிய நேரங்களில் பணிக்க செல்ல முடியாமல் அடிக்கடி விபத்துக்களில் சிக்க நேரிடுவதாகவம் வாகன ஓட்டிகள் வேதனையுடன் கூறுகின்றனர்...

சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் அதிகப்படியான பொது போக்குவரத்துகளை மக்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால் சென்னையில் மக்கள் இலகுவாக அணுகும் வகையில், பொது போக்குவரத்து இல்லாத காரணத்தினால்தான், தனி நபர்களின் வாகனங்கள் அதிகரித்து காணப்படுகிறது என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஒரு நகரின் வளர்ச்சி அந்த நகரின் கட்டமைப்பு வசதிகளும், தொழில்துறை நிறுவனங்களும் அவற்றை இணைக்க கூடிய வாகன போக்குவரத்தின் அடிப்படையிலேயே அமைகிறது.. 

அதிகமான வாகனங்களை பயன்படுத்தும் நகரங்களில் சென்னை மூன்றாம் இடத்தில் உள்ளது என்பதை நினைத்து மகிழ்ந்தாலும் அதிக விபத்துக்கள் ஏற்படும் மாநிலத்தில் தமிழ்நாடு முதல் இடத்தில் இருப்பது கவலையை ஏற்படுத்துகிறது...

எனவே வாகன எண்ணிக்கை அதிகரித்ததற்கு ஏற்றார் போல் சாலை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாக உள்ளது...

Night
Day