அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் 2 வது நாளாக 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு..1

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இரண்டாவது நாளாக 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

1050 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஒன்று மற்றும் இரண்டாவது அலகுகளுக்கு அருகில் உள்ள குளிர்விப்பு அறை மற்றும் கட்டுப்பாட்டு அறை பகுதிகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு மளமளவென பரவி வேகமாக எரியத் தொடங்கியது. இதையடுத்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தூத்துக்குடி மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்புத் துறையினர் 20 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். 

இந்த தீ விபத்தால் முதலாவது  மற்றும் இரண்டாவது யூனிட்களில் இருந்த ஹெச்டி மின்சார வயர்கள், மின் மோட்டார்கள், ராட்சச இயந்திரங்கள் மற்றும் ஹைட்ராலிக் மெஷின் ஆகியவை சேதமடைந்ததால் 2வது நாளான இன்று 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. மேலும் இந்த இரண்டு அலகுகளும் தொடர்ந்து இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.   

இதனிடையே விபத்து நிகழ்ந்த இடத்தை மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் நேரில் பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். இந்த தீ விபத்து குறித்து தெர்மல் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில் மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  

Night
Day