அமலாக்கத்துறை விசாரணையை ஒத்திவைக்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்தாண்டு ஜூன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதில் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் ஜனவரி 22ம் தேதி குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்ய தேதி நிர்ணயிக்கப்பட்ட நிலையில், சென்னை மத்திய குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகளின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத் துறை தாக்கல் செய்த இந்த வழக்கின் விசாரணையை துவங்க கூடாது என்று செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையில் இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி அல்லி,  செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், குற்றச்சாட்டுகள் பதிவுக்காக செந்தில் பாலாஜியை நாளை நேரில் ஆஜர்ப்படுத்தவும் உத்தரவிட்டார்.


இதனிடையே, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில்  புழல் சிறையில் இருந்து காணொலி மூலம் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலலை நாளை வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை வரும் 19ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

varient
Night
Day