அமாவாசை தினத்தையொட்டி திருச்செந்தூரில் 100 அடி உள்வாங்கிய கடல்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இன்று இரண்டாவது நாளாக கடல் 100 அடி தூரம் உள்வாங்கியது. திருச்செந்தூரில் அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் கடல் உள்வாங்குவது அவ்வப்போது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று அமாவாசை என்பதால் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்புள்ள கடல் உள்வாங்கி காணப்பட்டது. நாழிக்கிணறு முதல் அய்யா கோவில் வரை சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு 60 அடி வரை உள்வாங்கி காணப்பட்டது. இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக 100 அடிக்கு மேல் கடல் உள்வாங்கியுள்ளது. இதனால் பச்சை நிற பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிவதுடன், பாறை இடுக்குகளில் அபூர்வ வகை மீன்களும் காணப்படுகிறது. கடல் சீற்றமின்றி அமைதியாக காணப்படுவதால் பக்தர்கள் வழக்கம்போல் கடலில் நீராடி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

Night
Day