அமைச்சர் கே.என் நேருவின் சகோதரரிடம் ED மீண்டும் விசாரணை

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.கடந்த 7ம் தேதி முதல் 10ஆம் தேதி வரை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.  சோதனைகளுக்கு இடையே அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு ரவிசந்திரனை அழைத்து சென்ற அதிகாரிகள் பல்வேறு கிடுக்குபிடி விசாரணைகளை மேற்கொண்டனர். இதனிடையே, ரவிச்சந்திரனுக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்பட்டதாக கோரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்த நிலையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில் அமலாக்குத்துறை அலுவலகத்தில் 3வது முறையாக ஆஜரான ரவிசந்திரனிடம் சட்டவிரோத பண பரிமாற்றம்  உள்ளிட்டவை குறித்து விசாரணை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Night
Day