அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் 10 மணிநேரம் ED சோதனை நிறைவு - முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்

எழுத்தின் அளவு: அ+ அ-

சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக சென்னை மற்றும் கோவை உள்ளிட்ட இடங்களில் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் சகோதரர்கள், மகன், மகள் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் 10 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் பிரபல கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் சென்னையில் தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, பெசன்ட் நகர், சி.ஐ.டி. காலனி, எம்.ஆர்.சி.நகர் உள்ளிட்ட 10 இடங்களில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனங்கள், மின் உற்பத்தி நிறுவனம் தொடர்பான இடங்களில் அமலாக்‍கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

இதேபோல் பட்டினப்பாக்கம் எம் ஆர் சி நகரில் உள்ள  ராமச்சந்திரன் வீட்டிலும், சென்னை பெசன்ட் நகரில் உள்ள அமைச்சர் கே என் நேருவின் மற்றொரு சகோதரர் ரவி வீட்டிலும் அலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கடந்த 2018 ஆம் ஆண்டு எஸ்பிகே குழுமம், டிவிஎச் தொடர்பான இடங்களில் சோதனை நடத்தி 100 கோடி ரூபாய் பணம், 90 கிலோ தங்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. 

சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக மேற்கொண்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் அமலாக்‍கத்துறைக்கு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Night
Day