அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கு விசாரணை நவ.15-ம் தேதிக்கு தள்ளிவைப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை பதிவு செய்த சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்ட வழக்கின் விசாரணையை நவம்பர் 15ம் தேதிக்கு சென்னை முதன்மை அமர்வு தள்ளிவைத்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜராகினார். செந்தில் பாலாஜி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் புதிதாக மூத்த வழக்கறிஞர் ஆஜராக இருப்பதால், விசாரணையை தள்ளிவைக்குமாறு கேட்டுக்கொண்டார்.  அமலாக்கத்துறை சார்பில் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, விசாரணையை நவம்பர் 15ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, மேற்கொண்டு அவகாசம் கேட்கக்கூடாது என அறிவுறுத்தினார்.

Night
Day