அமைச்சர் துரைமுருகன் மகனும், திமுக எம்.பி.யுமான கதிர் ஆனந்த் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர்

எழுத்தின் அளவு: அ+ அ-

தி.மு.க. எம்.பி., கதிர் ஆனந்துக்குச் சொந்தமான வீடு மற்றும் கல்லூரியில், அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கதிர் ஆனந்த் நேரில் ஆஜரானார்.

திமுக அமைச்சர் துரைமுருகனின் மகனும், வேலுார் தொகுதி தி.மு.க. எம்.பி.யுமான கதிர் ஆனந்த், கடந்த 2019ஆம் ஆண்டு தனது தொகுதியில் போட்டியிட்டபோது, தனது சொத்து மதிப்பு 88 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் இருப்பதாக, வேட்பு மனுவில் தெரிவித்திருந்தார். அதன்பின்னர் எம்.பி.,யான பிறகு  கதிர் ஆனந்தின் அவரது சொத்து அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு, காட்பாடி காந்தி நகரில் உள்ள கதிர் ஆனந்தின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான கிறிஸ்டியன் பேட்டையில் உள்ள அவருக்கு சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லுாரி ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள், 44 மணி நேரம் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், கதிர் ஆனந்த் கல்லுாரியில் இருந்து, சுமார் 13 கோடியே 70 லட்சம் ரூபாய் பணத்தை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த பணம் குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டுமென கதிர் ஆனந்திற்கு சம்மன் அளிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலூர் திமுக எம்.பி. கதிர் ஆனந்த் நேரில் ஆஜரானார்.

Night
Day