அமைச்சர் துரைமுருகன் மகனும், திமுக எம்.பி.யுமான கதிர் ஆனந்த் வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த வழக்கில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

2019 மக்களவைத் தேர்தலின் போது வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அப்போது திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசனின் சிமெண்ட் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 11 கோடியே 51 லட்சம் ரூபாய் பணத்தை வருமான வரித் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அப்போதைய தேர்தல் கணக்கு அலுவலர் அளித்த புகாரின் பேரில் கதிர் ஆனந்த், பூஞ்சோலை சீனிவாசன் உள்ளிட்டோர் மீது காட்பாடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு மீதான விசாரணை வேலூர் முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று நடைபெறும் விசாரணைக்காக கதிர் ஆனந்த் நீதிமன்றத்தில் ஆஜரானார். 

Night
Day