எழுத்தின் அளவு: அ+ அ- அ
அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் கூறிய கருத்துக்கு பதிலளிக்க, வாக்காளர்கள் தங்கள் காலணிகளை தயாராக வைத்துக் கெள்ள வேண்டும் என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை ஆவேசமாக வலியுறுத்தியுள்ளார்.
மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியில், பாஜக வேட்பாளர் வினோஜ்.பி. செல்வத்தை ஆதரித்து அண்ணாமலை பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் பெரும் அரசியல் புரட்சி நிகழ உள்ளதாகவும், திமுகவின் சென்னை கோட்டை உடைய தொடங்கியுள்ளதாகவும் கூறினார். மேலும் பில்கேட்சுக்கு சமமானவர்கள் கோபாலபுரத்தில் உள்ள குடும்பம் மட்டுமே என்று கூறிய அண்ணாமலை, தயாநிதி மாறனுக்கு எம்பியாக இருக்க தகுதி இல்லை என்றார். மத்திய சென்னையில் உள்ள அனைத்து பங்க்குகளிலும் பெட்ரோல், டிசல் விலை 5 ரூபாய் குறைப்பதாக தயாநிதி மாறன் உரைத்தால் தங்கள் வேட்பாளரை வாபஸ் பெறுவதாக கூறினார். அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், தமிழக அரசு மாதம்தோறும் கொடுக்கும் பணத்தால் பெண்கள் fair and lovely போட்டுக்கொண்டு மினுக் மினுக் என மின்னுவதாக கூறியதற்கு கண்டனம் தெரிவித்த அண்ணாமலை, திமுகவினருக்கு வரவேற்பு கொடுக்க அனைவரும் காலணிகளை தயாராக வைத்துக்கொள்ளுங்கள் எனக் குறிப்பிட்டார்.