அமைச்சர் பதவியை பறிக்காதது ஏன்

எழுத்தின் அளவு: அ+ அ-

பெண்களை இழிவுப்படுத்திய அமைச்சர் பொன்முடியை கட்சி பொறுப்பிலிருந்து திமுக நீக்கியுள்ளது. அமைச்சர் பதவியை பறிக்காமல் கண்துடைப்புக்காக  கட்சி பதவியை பறித்து விளம்பர திமுக அரசு நாடகமாடியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி என்றால் சர்ச்சை என்பதே நிரூபிக்கும் விதமாக இதற்கு முன்னதாக அரசு பேருந்துகளில் மகளிர் இலவசப் பயணம் செய்வதை ஓசி பயணம் என்றும், பெண் மக்கள் பிரதிநிதி ஒருவரை சாதியின் பெயரைக் குறிப்பிட்டுக் கேட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்ந்து, கிராம சபை கூட்டம் ஒன்றில் பெண் ஒருவரை ஒருமையில் பேசியதும், பொதுமக்களுடனான பேச்சுவார்த்தையின்போது தடித்த வார்த்தைகளால் அவர் பேசியது பேசுபொருளானது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, சென்னையில் தந்தை பெரியார் திராடவிடர் கழகம் சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் பொன்முடி, மதம் குறித்தும், பெண்களை மிக அருவருப்பான வகையிலும் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

சர்ச்சை ஏற்படுத்தும் விதமாக பேசிவதையே வாடிக்கையாக வைத்துள்ள அமைச்சர் பொன்முடி இதுபோன்று பல்வேறு இடங்களில் பேசியது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இதுதான் திராவிட மாடல் ஆட்சியா என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பொன்முடி வகித்து வந்த கட்சி பதவியான துணை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கி திமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. தொடர்ந்து அமைச்சர் பொன்முடி தொடர்ந்து இதுபோன்று பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசி வரும் நிலையில் அவர் அமைச்சராக இருக்கவே தகுதியற்றவர் என மகளிர் அமைப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஆனால் திமுக கட்சி தலைமையோ பலதரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வலுத்த நிலையில் வெறும் கண்துடைப்பிற்காக பொன்முடியை கட்சி பதவியிலிருந்து மட்டும் நீக்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


Night
Day