அமைச்சர் பொன்முடியின் வெறுப்பு பேச்சு - தமிழக டிஜிபிக்கு உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பெண்களையும், இந்துமதத்தையும் இழிவாக பேசிவிட்டு அமைச்சர் பொன்முடி மன்னிப்பு கேட்பதால் எந்த பயனும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் காட்டமாக கூறியுள்ளது.

கடந்த 6ம் தேதி தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து மதத்தையும், பெண்களையும் குறித்து அமைச்சர் பொன்முடி இழிவாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தமிழக டிஜிபிக்கு சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளது. அமைச்சர் பொன்முடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம் அதற்கு விளக்கம் அளிக்க தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், பொன்முடியின் பேச்சு முழுக்க முழுக்க துரதிஷ்டவசமானது என்றும் அமைச்சர் பொறுப்பை வகிப்பவர் பொறுப்புடன் பேச வேண்டாமா என்றும் காட்டத்துடன் கேள்வி எழுப்பியுள்ளது. பெண்களையும், இந்து மதத்தையும் இழிவாக பேசிவிட்டு அமைச்சர் பொன்முடி மன்னிப்பு கேட்பதால் எந்த பயனும் இல்லை. வெறுப்பு பேச்சு தொடர்பாக புகார் அளித்தாலும் இல்லாவிட்டாலும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

Night
Day