அமைச்சர் பொன்முடி மீது விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன் - பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் திட்டவட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமைச்சர் பொன்முடி மீது விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன் என பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

சென்னை மாநகராட்சி 134வது வார்டு பாஜக கவுன்சிலரான உமா ஆனந்த், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள காவல் நிலையத்தில் அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் ஒன்றை அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு டிஜிபி, பெருநகர சென்னை காவல்துறை ஆணையர், உள்துறை செயலாளர், தலைமைச் செயலாளர், உள்ளிட்டோருக்கு புகார் அளிக்க உள்ளதாகவும், திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் அமைச்சர் பொன்முடிக்கு தக்க பாடம் புகட்டுவார் என்றும் தெரிவித்துள்ளார்.

Night
Day