அமைச்சர் மா.சுப்பிரமணியன் மனு தள்ளுபடி

எழுத்தின் அளவு: அ+ அ-

அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த குடியிருப்பை, சென்னை மாநகராட்சி மேயராக இருந்த போது, போலி ஆவணங்கள் மூலம் தனது மனைவி காஞ்சனாவின் பெயருக்கு மா.சுப்பிரமணியன் மாற்றம் செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்‍கை ரத்து செய்யக் கோரி மா.சுப்பிரமணியன் மனு தாக்‍கல் செய்து இருந்தார்.
குடியிருப்பை வாங்கியதில் அரசுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை என்றும் எந்த மோசடியும் நடைபெறவில்லை எனவும் அதிகார துஷ்பிரயோகம் செய்ததற்கு எந்த ஆதாரங்களும் இல்லை என மா.சுப்பிரமணியன் தரப்பில் வாதம் செய்யப்பட்டது.

இந்த வழக்‍கை விசாரித்த நீதிபதி வேல்முருகன்,  மா.சுப்பிரமணியன் கோரிக்கையை ஏற்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்தார். குற்றச்சாட்டுக்களை பதிவு செய்து, விசாரணையை தொடர சிறப்பு நீதிமன்றத்துக்கு நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார். 

Night
Day