அமைச்சர் மா.சு-வின் சைதை தொகுதியில் கள்ளச்சந்தையில் மது விற்பனை

எழுத்தின் அளவு: அ+ அ-

 தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனின் சைதாப்பேட்டை தொகுதியில் கள்ளச்சந்தையில் மது விற்பனை அமோகமாக நடைபெற்று வரும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

சென்னையில் 24 மணிநேரமும் கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெறுகிறது. சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனின் சைதாப்பேட்டை தொகுதியில் மதுபானக்கூடங்களில் காலையிலேயே மது விற்பனை களைகட்டி வருகிறது. டாஸ்மாக் கடைகளில் நண்பகல் 12 மணிக்கு பிறகே மது விற்க அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் டாஸ்மாக்‍ கடைகளை ஒட்டி உள்ள மது கூடங்களில் காலை 8 மணிக்‍கே விறுவிறுப்பாக நடைபெறும் மது விற்பனையை காவல்துறையினர் கண்டு கொள்வதில்லை என பொதுமக்‍கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Night
Day