எழுத்தின் அளவு: அ+ அ- அ
திருச்சி மாநகராட்சியுடன் கிராம ஊராட்சிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், திமுக அமைச்சர் கே.என்.நேருவின் வீட்டை முற்றுகையிட போவதாக அறிவிக்கப்பட்டதால் கிராமங்களை விட்டு வெளியேற மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட அதவத்தூர், வயலூர், கொய்யா தோப்பு, அல்லித்துறை ஆகிய 11_ கிராம ஊராட்சிகளை திருச்சி மாநகராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை கைவிட கோரி பொதுமக்கள் 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒருபகுதியாக அமைச்சர் கே.என்.நேருவின் இல்லத்தை இன்று முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட போவதாக கிராம மக்கள் அறிவித்திருந்தனர்.
இந்த போராட்டத்தை முடக்கும் வகையில் பொதுமக்கள் கிராமங்களை விட்டு வெளியே வர போலீசார் தடை விதித்துள்ளனர். மேலும் ஒவ்வொரு கிராமத்திலும் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விளம்பர திமுக அரசின் இந்த அடக்குமுறைக்கு கிராம மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.