எழுத்தின் அளவு: அ+ அ- அ
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாக விளங்கிய சட்ட மேதை அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 134வது பிறந்தநாளை கொண்டாடும் அனைவருக்கும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்து செய்தியில், இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாக விளங்கிய சட்ட மேதை அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 134வது பிறந்த நாளில், அவரது தன்னலமற்ற சேவைகளை நினைவு கூர்ந்து, அவர்தம் பிறந்தநாளை சிறப்புடன் கொண்டாடும் அனைவருக்கும் தமது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
சமூகச் சீர்திருத்தத்திற்காக தன் வாழ்வையே அர்ப்பணித்தவர் டாக்டர் அம்பேத்கர் என்றும், இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பியாகவும் செயல்பட்டவர் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா புகழாரம் சூட்டியுள்ளார்.
நாட்டில் கல்வி, சுதந்திரம், பெண்களுக்கான உரிமைகள் எல்லாவற்றையும் நம் சமூகத்தில் உள்ள அனைவரும் பெற வேண்டும் என்று மிக சிறந்த ஒரு அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பெருமைக்குரியவர் - தீண்டாமை இழிவுகளை ஒழிக்கவும், சாதி ஏற்றத்தாழ்வுகளை மாற்றி அமைத்து சமத்துவத்தை நிலைபெறச் செய்யவும் அல்லும் பகலும் அயராது உழைத்தவர் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
அண்ணல் அம்பேத்கர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க தொடர்ந்து போராடியவர் - மேலும் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்தி கொண்டவர் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா புகழாரம் சூட்டியுள்ளார்.
பெண்களுக்கு சொத்துரிமைச் சட்டம் கொண்டு வந்ததில் அண்ணல் அம்பேத்கர் மிக முக்கிய பங்கு வகித்தவர் என்று அதேபோன்று தொழிலாளர் நல உரிமைச் சட்டங்கள் பலவற்றை உருவாக்கிய பெருமைக்குரியவர் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்
சமூக நீதி போராளியாக திகழ்ந்த அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளில் அவர்தம் கொள்கைகளை எந்நாளும் தொடர்ந்து பின்பற்றிட அனைவரும் உறுதி ஏற்போம் என அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.