எழுத்தின் அளவு: அ+ அ- அ
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் முன்னாள் சிறப்பு பாதுகாவலர் வெ.ராஜேந்திரன் மறைவுக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், ராஜேந்திரன் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து தான் மிகவும் வருத்தமுற்றதாக குறிப்பிட்டுள்ளார். அன்பு சகோதரர் ராஜேந்திரன், புரட்சித்தலைவி அம்மா மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர் என்றும், அம்மா அவர்களுக்கு பல்வேறு காலக்கட்டங்களில் பாதுகாப்பு அரணாக இருந்து சிறப்பான வகையில் தனது பணியினை மேற்கொண்டவர் எனவும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். சகோதரர் ராஜேந்திரனை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ள புரட்சித்தாய் சின்னம்மா, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாக குறிப்பிட்டுள்ளார்...