"அம்மாவின் வழியில் மக்கள் பயணம்" மேற்கொள்கிறார் புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழக மக்களின் உரிமைகளை காப்பாற்றிடவும், திமுக தலைமையிலான ஆட்சியின் அவலங்களை மக்களுக்கு தோலுரித்து காட்டிடவும், பெண்ணினத்தின் பாதுகாப்பை பேணிக்‍ காத்திடவும், அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, வரும் 17ம் தேதி முதல் "அம்மாவின் வழியில் மக்கள் பயணம்" மேற்கொள்கிறார். தென்காசி, கடையநல்லூர், வாசுதேவ நல்லூர், சங்கரன்கோவில் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில், வரும் 20ம் தேதி வரை, கழகத் தொண்டர்களையும், பொதுமக்களையும், புரட்சித்தாய் சின்னம்மா நேரில் சந்திக்கிறார்.

தமிழக மக்களின் உரிமைகளை காப்பாற்றிடவும், திமுக தலைமையிலான ஆட்சியின் அவலங்களை மக்களுக்கு தோலுரித்து காட்டிடவும், பெண்ணினத்தின் பாதுகாப்பை பேணிக் காத்திடவும், கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, தென்காசி, கடையநல்லூர், வாசுதேவ நல்லூர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிகளில் "அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தை தொடர்ந்து மேற்கொள்கிறார்.

பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவரின் பெருமைகளையும், பெண்ணினத்தின் பாதுகாவலராக விளங்கிய புரட்சித்தலைவி அம்மாவின் தன்னலமற்ற சேவைகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் புனித பயணமாக புரட்சித்தாய் சின்னம்மா தொடர்ந்து பயணிக்க உள்ளார்.

வரும் 17ம் தேதி புதன்கிழமை அன்று மாலை 3.00 மணிக்கு தென்காசி ஒன்றியம், காசிமேஜர்புரத்திலிருந்து “அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தை” ஆரம்பித்து தென்காசி, கீழப்பாவூர் மற்றும் ஆலங்குளம் ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கழக தொண்டர்களையும், பொது மக்களையும் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா நேரில் சந்திக்‍கிறார்.

இரண்டாம் நாளான 18ம் தேதி வியாழக்கிழமை மாலை 3.30 மணிக்கு தென்காசி ஒன்றியம் பிரானூர் பார்டர் பகுதியிலிருந்து “அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தை” தொடங்கி தென்காசி, செங்கோட்டை மற்றும் கடையநல்லூர் ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கழக தொண்டர்களையும், பொது மக்களையும் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா நேரில் சந்தித்து புரட்சித்தலைவரின் பெருமைகளையும், பெண்ணினத்தின் பாதுகாவலராக விளங்கிய புரட்சித்தலைவி அம்மாவின் சேவைகளையும் எடுத்துரைக்கிறார்.
 
மூன்றாம் நாளான 19ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணிக்கு வாசுதேவநல்லூர் ஒன்றியம் புளியன்குடியிலிருந்து“அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தை” ஆரம்பித்து வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், குருவிகுளம் மற்றும் மேலநீலிதநல்லூர் ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கழக தொண்டர்களையும், பொது மக்களையும் புரட்சித்தாய் சின்னம்மா நேரில் சந்திக்கிறார்.

நான்காம் நாளான 20ம் தேதி சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு மேலநீலிதநல்லூர் ஒன்றியம், நடுவக்குறிச்சியிலிருந்து “அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தை” ஆரம்பித்து மேலநீலிதநல்லூர் மற்றும் வாசுதேவநல்லூர் ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கழக தொண்டர்களையும், பொது மக்களையும் அஇஅதிமுக பொதுச்செயலாளர்  புரட்சித்தாய் சின்னம்மா நேரில் சந்திக்‍கிறார்.

கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா மேற்கொள்ளும் “அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தில்” கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள், கழக தொண்டர்கள், புரட்சித்தலைவி அம்மா வழியில் தொடர்ந்து பயணிக்கின்ற அனைத்து தாய்மார்கள், இளம் சமுதாயத்தினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் ஜாதி, மத பேதமின்றி அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று அஇஅதிமுக பொதுச்செயலாளரின் முகாம் அலுவலகம் கேட்டுக்‍ கொண்டுள்ளது.

Night
Day