அம்மா ஆட்சியை கொண்டு வராமல் ஓயப்போவதில்லை - அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா பேட்டி

எழுத்தின் அளவு: அ+ அ-

வெளிநாட்டு முதலீடுகள் பெருமளவில் தமிழகத்திற்கு கொண்டு வரப்படுவதாக விளம்பரம் செய்யும் திமுக விளம்பர அரசு, அது தொடர்பான உண்மை விவரங்களை வெளியிட வேண்டும் என அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார்.

பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்திற்கு நேரில் சென்று அங்கு அமைந்துள்ள அண்ணா திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, அங்கு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிநாட்டு முதலீடுகள் பெருமளவில் தமிழகத்திற்கு வந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கும் திமுக விளம்பர அரசு, இதுதொடர்பாக மொத்தம் எத்தனை ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன? எவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன? இன்னும் எவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்? என்ற விவரங்களை வெளியிடாதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

வரும் 2026ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலைத் தொடர்ந்து, தமிழகத்தில் புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சி நிச்சயம் மலரும் என்று கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா உறுதிபட தெரிவித்தார்.


Night
Day