அம்மா பிறந்தநாள் விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு பயனாளிகள் நன்றி

எழுத்தின் அளவு: அ+ அ-

மாண்புமிகு அம்மாவின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வழங்கிய தையல் இயந்திரன், மருந்து தெளிக்கும் இயந்திரங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவி பொருட்கள் வீடு தேடிசென்று பயனாளிகளிடம் நேரில் ஒப்படைக்கப்பட்டன. அதனை பெற்றுக்கொண்ட பயனாளிகள் புரட்சித்தாய் சின்னம்மாவிற்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்தனர்.

இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மாவின் 77ஆவது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு கடந்த 24ஆம் தேதி உசிலம்பட்டி PMT கல்லூரி எதிரேயுள்ள திடலில் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கலந்து கொண்டு ஏழை எளிய மக்கள், மாணவ மாணவிகள், மகளிர் குழுவினர், விவசாயிகள், மாற்றுதிறனாளிகள் என பல்வேறு தரப்பினருக்கும் லேப்டாப், சைக்கிள், தையல் இயந்திரம், மருந்து தெளிக்கும் இயந்திரம், எண்ணெய் செக்கு இயந்திரம், ஆடு கோழி வளர்ப்பு உள்ளிட்ட ஏராளமான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதையடுத்து மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் புரட்சித்தாய் சின்னம்மாவிடமிருந்து நலத்திட்ட உதவிகளைப் பெற்ற பயனாளிகளுக்கு வீடு தேடி சென்று நலத்திட்ட உதவிப் பொருட்கள் ஒப்படைக்கப்பட்டன. 

அந்த வகையில், மதுரை மாவட்டம், உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எருமார்பட்டி ஊராட்சியில் உள்ள அம்மன்முத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்த பெண் விவசாயிகளிடம் புரட்சித்தாய் சின்னம்மா அவர்களால் வழங்கப்பட்ட மருந்து தெளிக்கும் இயந்திரங்கள் ஒப்படைக்கப்பட்டது.

இதேபோல், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா கழுகர்கடை பகுதியை சேர்ந்த பயனாளிகளுக்கு புரட்சித்தாய் சின்னம்மா அவர்களால் வழங்கப்பட்ட தையல் இயந்திரங்கள், கழுகர்கடை மேலத்தெரு பகுதியை சேர்ந்த விவசாயிக்கு மருந்து தெளிக்கும் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நலத்திட்ட உதவிகளைப் பெற்றுக் கொண்ட பொதுமக்கள், தங்களைப் போன்ற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் சிறப்படைய உதவி செய்து வரும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

Night
Day