அய்யா நல்லகண்ணு நூற்றாண்டு பிறந்தநாள் - புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து

எழுத்தின் அளவு: அ+ அ-

நூற்றாண்டு பிறந்தநாளை காணும் மதிப்பிற்குரிய அய்யா R. நல்லகண்ணுவுக்கு, அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அய்யா நல்லகண்ணு, இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து மக்கள் சேவையாற்றிட வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியில், மதிப்பிற்குரிய அய்யா திரு. R. நல்லகண்ணுவுக்கு, தன் இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

அய்யா நல்லகண்ணு எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டு, தன்னலமின்றி, அனைவரிடத்திலும் சமமாக நட்பு பாராட்டக்கூடிய சிறந்த மனிதர் - சுமார் 80 ஆண்டுகளுக்கும் மேலாக, அரசியலில் ஈடுபட்டு வரும் அய்யா நல்லகண்ணு, இதுவரை சட்டமன்ற உறுப்பினராகவோ, நாடாளுமன்ற உறுப்பினராகவோ இருந்தது கிடையாது - ஆனால் மக்கள் மன்றத்தில், தமிழக மக்களின் உரிமைகளுக்காகவும் அவர்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திடவும் தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டும், சமூக பணிகளில் தன்னை முழுவதுமாக அர்பணித்துக் கொண்டும் அயராமல் தொண்டாற்றி வருவதை இந்நன்னாளில் எண்ணி பெருமிதம் அடைவதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

அய்யா நல்லகண்ணுவின் நூற்றாண்டு பிறந்தநாளில், அவர் நீண்ட ஆயுளோடும், நல்ல உடல்நலத்தோடும், என்றென்றும் மகிழ்ச்சியோடு இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து மக்கள் சேவையாற்றிட வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாக கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

Night
Day