அரசியல் அறிவு முக்கியம் மக்களே... வட சென்னைக்கு இதுதான் கதியா...

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையின் உள்கட்டமைப்பு வசதிகளுக்காக பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இருப்பதாக, விளம்பர திமுக அரசு கூறி வந்தாலும், வட சென்னை மக்கள் அதிகம் பயன்படுத்தும் மின்ட் சாலையிலுள்ள வள்ளலார் நகர் பேருந்து நிலையம், அடிப்படை வசதிகள் இன்றி காணப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள பயணிகளின் அவலநிலை குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

இருக்கைகள், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி காணப்படும் வள்ளலார் நகர் பேருந்து நிலையத்தின் காட்சிகள்தான் இவை...

ஆட்சிக்கு வந்தால் அதை செய்வோம் இதை செய்வோம் என வாக்குறுதிகளை அள்ளி வீசினார் திமுக தலைவர் ஸ்டாலின். ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் கடந்தும், கொடுத்த வாக்குறுதிகளில் 10 சதவீதம் கூட நிறைவேற்றப்படவில்லை என்பதே மக்களின் வேதனையாக உள்ளது.

அந்த வரிசையில் வட சென்னை மக்கள் அதிகம் வந்து செல்லும் மின்ட் சாலையில் உள்ள வள்ளலார் நகர் பேருந்து நிலையம், அடிப்படை வசதிகள் இன்றி அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. 

பேருந்து நிலையத்திற்கு வரும் மக்கள் அமர்வதற்கு இருக்கைகள் கூட இல்லை என்றும், வெயில் நேரத்தில் வரும் பயணிகள், ஒதுங்குவதற்கு நிழற்குடைகள் கூட முறையாக இல்லை என்றும், ஆதங்கம் தெரிவிக்கின்றனர் வட சென்னை மக்கள். 

பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் இயற்கை உபாதைகளை கழிக்க கழிவறைகள் இன்றி தவித்து வருதாகவும், அதிலும் பெண் பயணிகளின் நிலைமை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்கின்றனர் பெண் பயணிகள்.   

பேருந்து நிலையத்திற்கு வரும் வியாபாரிகள், பேருந்து நிறுத்தத்தில் இருக்கைகள் இல்லாததால், பேருந்துக்காக பல மணி நேரம் காத்திருந்து குப்பையில் அமரும் நிலை உள்ளதாக வருத்தம் தெரிவிக்கின்றனர்.

விளம்பர திமுக அரசு வடசென்னை மக்களின் மேம்பாட்டிற்காக ஆயிரம் கோடி ஒதுக்கி இருப்பதாக தம்பட்டம் அடித்து வரும் நிலையில், வட சென்னையில் உள்ள அதிகம் பயன்படுத்தும் பேருந்து நிலையத்தை கூட முறையாக பராமரிக்க முடியாத நிலைதான் உள்ளது என்பதற்கு வள்ளலார் நகர் பேருந்து நிலையமே சாட்சி.

varient
Night
Day