எழுத்தின் அளவு: அ+ அ- அ
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் உள்ள அரசு பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியை ரமணி பள்ளியிலேயே கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதற்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் உள்ள அரசு பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியை ரமணியை பள்ளியிலேயே கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்திருப்பது மிகவும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தமிழகத்தில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை என்பது மீண்டும் நிரூபணம் ஆகியிருக்கிறது என்றும், திமுக தலைமையிலான விளம்பர ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதை இச்சம்பவம் வெளிச்சம் போட்டு காட்டியிருப்பதாக சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்த ஆசிரியை ரமணியின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும், தமிழகத்தில் சட்ட விரோத செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது என சின்னம்மா குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த விளம்பர ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு பாதுகாக்கப்படாததால், யார் வேண்டுமானாலும் எதையும் செய்யலாம் என்ற அவல நிலை இருப்பது மிகவும் வேதனையளிக்கிறது என்றும், இவ்வாறு குற்றச்செயல்கள் தொடர்ந்து நடைபெறுவதால் மாநிலத்தின் பாதுகாப்பே கேள்விக்குறியாகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
புரட்சித்தலைவி அம்மா ஆட்சிக்காலத்தில் அமைதி பூங்காவாக இருந்த தமிழகம் இன்றைக்கு ஏழை, எளிய, சாமானிய மக்கள் வாழ தகுதியற்ற, பாதுகாப்பற்ற ஒரு மாநிலமாக மாறி வருவது மிகுந்த வேதனையளிக்கிறது என புரட்சித்தாய் சின்னம்மா கூறியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள இளம் வயதினர் தவறான பாதைகளுக்கு சென்று விடாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது ஒரு அரசின் தலையாய கடமையாகும் என்றும் எனவே, திமுக தலைமையிலான அரசு கொஞ்சமாவது தமிழக மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, எஞ்சியிருக்கும் ஆட்சிக் காலத்திலாவது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா கூறியுள்ளார்.