அரசு பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் மாணவர் படுகாயம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே அரசு பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், 8-ஆம் வகுப்பு மாணவர் படுகாயமடைந்தார். 

தென்கடப்பந்தாங்கல் பகுதியை சேர்ந்த சிலம்பரசன் -  வச்சலா தம்பதியின் 3-வது மகன் ஹரிஷ், அங்குள்ள அரசுப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் மதியஉணவு இடைவேளையில் விளையாடிக் கொண்டிருந்த ஹரிஷ் மீது பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து மாணவரை வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்து,மேல் சிகிச்சைக்காக ரத்தினகிரி சிஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வட்டாட்சியர் உள்ளிட்டோர் மாணவர் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்த நிலையில்,  தென்கடப்பந்தாங்கல் அரசு பள்ளில் வருவாய் கோட்டாட்சியர், முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.

Night
Day