அரசு பேருந்தில் இருந்து மாணவி தவறி விழுந்து படுகாயம்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே அரசு பேருந்தில் இருந்து பள்ளி மாணவி தவறி சாலையில் விழும் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. 


கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரின் 13 வயது மகள் சுகந்தி அருகில் உள்ள முன்னவாழ்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கம் போல் மாலை பள்ளி முடிந்து அரசு பேருந்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது பேருந்து கிருஷ்ணாபுரம் பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது நிறுத்தம் என நினைத்து சுகந்தி இறங்கியதில் தவறி விழுந்தார். இதில் மாணவிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மீட்கப்பட்ட மாணவி தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Night
Day