எழுத்தின் அளவு: அ+ அ- அ
ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் நோயாளிகள் அச்சமடைந்து தலைதெரித்து ஓடினர்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 5 தளங்களுடன் இயங்கி வருகிறது. அந்த மருத்துவமனையில் உள்ள மின் இன்வெர்ட்டர் அறையில் மின் கசிவு காரணமாக நேற்று நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையின் இரண்டாவது தளம் முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. மேலும் புகைமூட்டம் மூன்றாவது மற்றும் நான்காவது தளங்களிலும் புகை சூழ்ந்ததால், அவசர அவசரமாக நோயாளிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட பின், பேட்டி அளித்த மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங், தீ விபத்தில் உயிர்சேதம் ஏற்படவில்லை என்றும், நோயாளிகள் அனைவரும் மீட்கப்பட்டதாக தெரிவித்தார்.