அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின்போது கர்ப்பிணி உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அரியலூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்மணி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கல்லக்குடி பகுதியை சேர்ந்தவர் முத்துராஜ். இவருடைய மனைவி திவ்யதர்ஷினி. 


கர்ப்பிணியான இவர், பிரசவத்திற்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் கடந்த ஒன்றாம் தேதி அனுமதிக்கப்பட்டார். பின்னர் அறுவை சிகிச்சை செய்து பிரசவம் பார்க்க வேண்டும் என மருத்துவர்கள் கணவர் முத்துராஜிடம், கையெழுத்து பெற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு உள்ளனர். இந்த நிலையில் சிகிச்சையின் போது கர்ப்பிணி பெண் உயிரிழந்துள்ளார். இதனையறிந்த குடும்பத்தினர் அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண்ணின் குடும்பத்தினர் மனு அளித்தனர்.

Night
Day