அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் செயலால் நோயாளிகள் அதிருப்தி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் வார்டின் உள்ளே டைல்ஸ் பதிக்கும் பணிகள் நடைபெறுவதால் நோயாளிகள் அவதியடைந்தனர். வடசென்னை ராயபுரம் பகுதியில் அமைந்துள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்னை மட்டுமல்லாது பிற மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்தும் சிகிச்சைக்காக நோயாளிகள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் தற்போது நோயாளிகள் இருக்கும் வார்டின் உள்ளே இயந்திரம் வைத்து டைல்ஸ் பதிக்கும் பணி நடைபெற்று வருகிது. இதனால் சிகிச்சை பெறும் நோயாளிகள் ஓய்வெடுக்க முடியாமல் அவதியடைந்துள்ளதாக கூறப்படுகிறது. நோயாளிகளை பற்றி கவலைப்படாமல் மருத்துவமனை நிர்வாகம் இவ்வாறு செய்வது நோயாளிகள் மற்றும் பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Night
Day