அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த அரசுக்கு அரிசி வியாபாரிகள் கோரிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என அரிசி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் சமீப காலமாக அரிசியின் விலை சிறுக சிறுக உயர்ந்து கிலோவுக்கு 5 ரூபாயில் இருந்து 15 ரூபாய் வரை விலை உயர்ந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வெளி மாநில அரிசிகள் அதிக அளவில் வருவதால் அதை வாங்கி விற்பனை செய்யும் உள்ளூர் வியாபாரிக்கு லாபம் கிடைப்பதில்லை. விளம்பர திமுக அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இதனை கண்டு கொள்ளவில்லை. எனவே தமிழக அரசு உடனடியாக விலைவாசியை கட்டுப்படுத்த மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என அரிசி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day