எழுத்தின் அளவு: அ+ அ- அ
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் மதுபோதையில் உள்ள சார்பதிவாளர் பத்திரப்பதிவு வேலைகளை தாமதப்படுத்துவதாகக் கூறி விவசாயி ஒருவர் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கரடிகுளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நடராஜன் என்பவர் தனது குடும்ப சொத்தை பத்திரப்பதிவு செய்ய ஜெயங்கொண்டம் பத்திர பதிவு அலுவலகத்திற்கு காலை முதல் மாலை வரை காத்துக் கிடந்துள்ளார். இதனையடுத்து சொத்து பத்திரத்தை சார்பதிவாளர் இளம்பரிதியிடம் கொடுத்த போது, அவர் மதுபோதையில் இருந்ததாகவும், அதனை படிக்காமலேயே தவறு இருப்பதாக கூறி வேலையை தாமதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து நடராஜனும், அவரது குடும்பத்தினரும் இளம்பரிதியுடன் வாக்குவாதம் செய்ததுடன், பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.