அரியலூர்: செந்துறை பகுதியில் பதுங்கி இருக்கும் சிறுத்தையை பிடிக்கும் பணி தீவிரம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் பதுங்கி இருக்கும் சிறுத்தையை பிடிக்க 3 கூண்டுகள் மற்றும் 22 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. செந்துறை அரசு மருத்துவமனையில் நேற்று முன் தினம் இரவு சிறுத்தை நடமாடியதாக வந்த தகவலையடுத்து வனத்துறையினர், காவல் துறையினர், தீயணைப்புடன் துறையினர் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சிறுத்தை நேற்று பிடிபடாத நிலையில் செந்துறை அருகே உள்ள மஞ்சளாபுரம் குழுமூர் ஆனைவாரி ஓடை, வஞ்சத்தண்ணோடை ஆகிய பகுதிகளில் சிறுத்தை நடமாட்டத்திற்கான கால் தடம் தெரியவந்தது. இதனை தொடர்ந்து வன காவலர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள், 22 சென்சார் பொருத்திய தெர்மல் கேமராக்கள் மற்றும் 3 கூண்டுகளில் இறைச்சியை வைத்து சம்பந்தப்பட்ட ஓடை பகுதிகளில் வைத்துள்ளனர். 

Night
Day