அருணாச்சலேஸ்வரர் கோயில் தலைமை சிவாச்சாரியாரை அறநிலையத்துறை இணை ஆணையர் தரக்குறைவாக பேசியதாக குற்றச்சாட்டு..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் தலைமை சிவாச்சாரியாரை, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தரக்குறைவாக பேசியதாக கூறி, சக சிவாச்சாரியார்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புகழ்பெற்ற திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் சுவாமிக்கு அபிஷேகம் செய்யும் பணியை தலைமை சிவாச்சாரியார் பி.டி.ரமேஷ் என்பவர் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதி, தலைமை சிவாச்சாரியாரை பார்த்து தாங்கள் புரோக்கர் வேலை செய்கிறீர்களா என தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மற்ற சிவாச்சாரியார்கள், அறநிலையத்துறை இணை ஆணையரை கண்டித்து, கோயிலில் நடைபெறும் அனைத்துவிதமான பூஜைகளையும் நிறுத்தி விட்டு, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Night
Day